நீராவியடிப்பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினை பற்றி பொய் பரப்புரை செய்யும் விகாராதிபதி!

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை பேணவேண்டும் என அரசாங்கம் அறிவித்தாலும் சில மதவாதா போக்குடையவர்களின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் விரக்த்தியினை ஏற்படுத்துகின்றது.
இன்னிலையில்தான் நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள குருகந்த றாயமகா  விகாரை என பெயர் சூட்டப்பட்டு அங்கு பௌத்த ஆலயத்தினையும் நிறவியுள்ளார்கள் இரு மதங்களுக்கிடையிலான பிரச்சனை  நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இன்னிலையில் அமைதிக்கு பங்கம் இன்றி இரு தரப்பினருகம் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இரண்டு தடவைகள் சிங்கள மக்களை அழைத்து அந்த பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ள பௌத்த விகாரையின் விகாராதிபதி நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் பற்றியும் அதன் நிர்வாகம் பற்றியும் தவறான புரிதனை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்துவருகின்றார்.
அங்கு செல்லும் அனைத்து சிங்கள மக்களுக்கும் நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் ஒன்று இல்லை என்றும் இதனை தமிழர்கள் அபரிக்க முயற்சி செய்வதாகவும் செம்மலையினை சேர்ந்த நவநீதன் என்பவரும் ஆலய நிர்வாகத்தினரும் தன்னை அவதூறாக பேசியதாகவும் அவர்கள் வெளிநாட்டு  பண சக்த்திகளின் பின்னணியில் செயற்பட்டு வருவதென்றான பரப்புரைகளை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து இனங்களுக்கிடையில் முறுகல் நிலையினையும் சிங்கள மக்களுக்கு இனவாதத்தினையும் ஊட்டும் நடவடிக்கையில் குறித்த விகாராதிபதி ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Updated: June 18, 2019 — 8:34 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *