நீங்கள் எப்போதும் எமக்கு தமிழீழ தமிழச்சி தான்!

தமிழ் இனம் ஒரு போதும் மறந்து விடக்கூடாத வெள்ளைக்கார பெண். தமிழ் இன விடுதலைக்காக பாடுபட்ட பாடுபட்டுக் கொண்டு இருக்கின்ற பெண்…!

வெளிநாட்டு சொர்க்க பூமியில் பிறந்தாலும் இவர் அதிகம் வாழ்ந்தது என்னவோ தமிழீழ தேச காடுகளிலும் தமிழீழ விடுதலைபுலிகளுடன் தான்!

தேசத்தின் குரலாய் தேசிய தலைவரின் குரலாய் உலகெல்லாம் ஓங்கி ஒலித்த அந்த கறுத்த கம்பீர குரல் மனிதனின் அருகில் எப்போதும் வெண்மலராய் வீற்றிருந்த அழகிய பூ!

சர்வதேசமே புலிகளை தடை விதித்த வேளையில் புலிகளின் வரிப்புலி உடையை தானும் அணிந்து வெள்ளைக்காரருக்கு தன்னை ஒரு புலித்தமிழச்சி என்று சொன்ன தேசபிமானி!

மேற்கத்திய பண்பாடு/கலாச்சாரத்தை
தூக்கி எறிந்து விட்டு தமிழையும்
தமிழர் கலாசரத்தையும் கடைக்கொண்டு
வாழ்ந்த-வாழும் வெண்மலர்!

குளுகுளு தேசத்தில் வசிக்க மனமில்லாமல் தன் கரம் பிடித்தவர் பயணம் தனை நேசித்து களத்தின் வெடிகளினுள்ளும் கடலும்-காடுமாய் நாடோடியாக தன் ஆயுளை தமிழர்க்காக தாரை வார்த்து எம் இனம் நேசித்த மூத்த பெண்!

தமிழீழத்தின் விடியலுக்கான
பேச்சுவார்த்தை மேசைகளில் எல்லாம் எதிரிகளின் கண்களை உறுத்திய
வெண்பனி மலர்!

தமிழீழ தேசம் மலரும் ஒரு நாள்! அங்கே உமக்கும் ஓர் இடம் வைப்போம் தாயே!

நீங்கள் எப்போதும் எமக்கு தமிழீழ தமிழச்சி தான்!

Updated: June 19, 2019 — 8:06 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *