பேரினவாத ஶ்ரீலங்கா இராணுவ கடையில் மதுபானம் விற்பனை: மாவையின் உதவியாளர் சுகிர்தன் உடந்தை..!!

வடதமிழீழம்: காங்கேசன்துறையில் இயங்கி வரும் பேரிஇனவாத அழிப்பு சிங்கள இராணுவத்தின் நலன்புரி விற்பனை நிலையத்தில் மதுபான விற்பனை நடைபெற்று வருவதாக வலிவடக்கு பிரதேசசபை கூட்டங்களில் நீண்டகாலமாக உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

காங்கேசன்துறை பகுதியானது வலி வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசமாக இருப்பதுடன் அப்பகுதிக்குள் எந்தவித மதுபான விற்பனை நிலையங்களிற்கும் அனுமதி வழங்கப்படாதிருக்கும் நிலையில் பேரினவாத இராணுவத்தினர் எந்த அனுமதியும் பெறாமல் நீண்டகாலமாக மதுபானம் விற்றுவருகிறார்கள்.

இது தொடர்பில் வலிவடக்கு பிரதேசசபையில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன் ஒரு பிரேரணையும் சில மாதங்களின் முன் சமர்ப்பித்திருந்தார். இது குறித்து நடவடிக்கையெடுப்பதாக தவிசாளர் சோ.சுகிர்தன் அப்போது கூறி சமாளித்திருந்தார்.

எனினும், பிரதேசசபை தவிசாளர் இது குறித்து நடவடிக்கையெடுக்கவில்லையென பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள். பல மாதங்களின் முன்னரே தவிசாளரின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்டும், பொதுமக்களிற்கான மதுபான விற்பனை தொடர்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதேவேளை, அண்மையில் பிரதேசசபை அமர்வில், இந்த விடயத்தை உறுப்பினர் ச.சஜீவன் மீள எழுப்பியிருந்தார். முறையற்ற விற்பனையை நிறுத்துமாறு இராணுவத்திற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக தவிசாளர் இதன்போதுதெரிவித்திருந்தார். எனினும், அவரது பதிலை நம்பாத உறுப்பினர்கள், இராணுவத்திற்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை சபைக்கு சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதமாக சபையின் ஒவ்வொரு அமர்விலும் உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்து வருகிறார்கள். எனினும் தவிசாளர் அந்த விபரத்தை வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்.

இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

வலி வடக்கு தவிசாளர் சே.சுகிர்தன், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் தனிப்பட்ட உதவியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழ பகுதிகளில் ஆக்கிரமிப்பு நோக்குடன் நிலைகொண்டிருக்கும் பேரினவாத சிங்கள  இராணுவத்தினர் அளவுக்கதிகமாக  தேக்கி வைத்திருக்கும் தங்கள் படையினருக்கு வழங்குவதற்கு வேலையில்லாது ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் எந்தவித நிர்வாக அனுமதிகளையும் பெற்றுக்கொள்ளாது  வியாபார நிலையங்களை அமைத்து அப் பகுதிகளில் வியாபார நிலையங்கள் வைத்திருப் போரின் நாளாந்த வருமானத்தை சுரண்டி வருவதுடன் தங்கள் வியாபார நிலையங்களினூடாக போதைப் பொருட்களையும் விற்பனை செய்து தமிழ் மக்களை மறைதுகமாக அழித்து வருவது தமிழ் மக்கள் அறிந்ததே.

Updated: June 25, 2019 — 5:26 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *