தேசியத்தலைவரின் இந்தியா மீதானபாசம்…

ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் “ஈழம் மலர்ந்தால் அதன் வெளியுறவு கொள்கை என்னவாக இருக்கும்” என்று கேட்டபோது

தலைவர் ஒளிப்பதிவு கருவியை அணைக்க சொல்லிவிட்டு சொன்னவர்

“எங்களுக்கு ஏது வெளியுறவு கொள்கை, இந்தியா வின் வெளியுறவு கொள்கை தான் ஈழத்தின்ர வெளியுறவு கொள்கையும் அப்படிதான் இருக்க முடியும். யாழ்பாணம் ஆறுகள்கூட இல்லாத பூமி,பெட்ரோல் டீசல் எல்லாம் எங்களுக்கு இல்லை. இருப்பதெல்லாம் திருகோணமலையும் அதை சுற்றின கடலும்தான். உலகத்திலே வேற யாரோ அங்க வந்து ஆளுமை செலுத்துவதை காட்டிலும் எங்கள் தொப்புள் கொடி சொந்தங்களின் நாடான இந்தியாவின் கட்டுபாட்டில் அது இருக்கட்டுமே”

என்று சொல்லியிருந்தார் தேசியதலைவரின் இந்த நிலைப்பாட்டை கடைசி வரைக்கும் ஆண்ட ஆளும் இந்திய அதிகார வர்க்கம் விளங்கி கொள்ளவே இல்லை.

இந்தியா வேகமாக வளர்ந்துவரும் ஒரு பிராந்திய வல்லரசு என்பதும் இந்தியாவை மீறி இப்பகுதியில் உலக ஒழுங்கு பெரிதாக மாறுபட்டு இயங்கா தென்பதையும் தேசியத்தலைவர் தீர்க்கமாக கணித்திருந்தார்.இந்திய அமைதிபடையின் வருகையும் தொடர்ந்து நடை பெற்ற பல துன்பியல் நிகழ்வுகளும் எமது இந்திய உறவில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டதோடு எமது இறுதி இலக்கான ஈழம் அமைவதற்கு சவாலாக இருந்தது இருக்கின்றது. இந்நிலையை மாற்ற நேர்மையோடும் உளவுபூர்வமாகவும் தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து முயற்ச்சி த்து வந்ததென்பதே தீர்க்கமான உண்மை. புலிகளை வன்முறையாளர் களாகவே சித்தரித்த இந்திய ஊடகங்களும் அவர்கள் விவசாயம் அமைப்பு நிர்வாகம், கலை, பண்பாடு, நீர்வள மேலாண்மை இன்னபிற துறைகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளை, சேவைகளை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்தது.

இவ்வளவிற்கு பிறகும் இந்தியா எங்களை காப்பாற்றும் தாய் தமிழகம் எங்களை கைவிடாது என்றே மே 15தேதிவரை சனம் நம்பியிருந்தது. ஏன் தேசிய தலைவர் கூட

“இந்தியா இலங்கை ராணுவத்திற்கு அதி நவீன தொழில்நுட்ப உதவிகளை செய்கின்றது, எங்களை பலவீனப் படுத்த வேண்டுமென்பதில் தெளிவாக செயல்படுகின்றது ஆனால் முற்று முழுதான அழிவை இந்தியா அனுமதிக்காது. கிளிநொச்சியை தாண்டி ஆமியை முன்னேற விடாது என்றே திடமாக நம்பியிருந்தார்.

ஆனால் தேசிய தலைவரின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கி எங்கள் முதுகில் குத்தி வீழ்த்துவதி லையே குறியாக நின்று அதில் தற்காலிக வெற்றியும் கண்டது துரோக இந்தியா.

ஆனால் முதுகில் குத்துபட்டவன் குற்றுயிரும் கொலையுயிருமாக கிடந்தானே தவிர மடிந்துவிடவில்லை அவன் நிமிர்ந்தெழுவான், நெஞ்சுயர்த்தி நடப்பான் வாங்கினதை வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுப்பான்.

வயிறு எரிஞ்சு சொல்கின்றேன் முப்பத் தேழு ஆண்டுகாலம் எத்தனை யோ இழப்புகளை சந்தித்தபோதிலும் ஒரு கணம்கூட கலங்காது விடுதலைப் போராட்டத்தை வழிநடாத்திய எங்கள் தேசிய தலைவருக்கு தவறான பொய்யான வாக்குறுதிகளையும் நம்பிக்கை துரோகத்தையும் தந்து அந்த மாமனிதனின் கண்கள் முதன் முறையாக கலங்கும்படி செய்த இந்த தலைவர்கள் நிச்சயம் அனுபவிப்பார் கள். சத்தியம் சாகாது. தர்மம் தோற்காது..!!

Updated: June 27, 2019 — 8:37 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *