தமிழினப் படுகொலையின் நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பயணம் 4 ம் நாள்.! ( காணொளி இணைப்பு ).!!

தமிழினப் படுகொலையின் நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பயணம் 4 ம் நாள்.!

இன்று தொடர்ச்சியாக 4 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி 04.09.2019 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்த மனிதநேய மிதிவண்டிப்பயணம் பெல்சியத்தில் Wavre, Namur, Arlon மாநகரங்களை ஊடறுத்து வந்தடைந்தது.

07.09.2019 அன்று Luxembourg நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பித்து , Luxembourg மாநகரசபையில் எம் கோரிக்கை அடங்கிய மனுவினைக் கையளித்து, தொடர்ச்சியாக யேர்மனிய எல்லையினை கடும் மழையின் ஊடாக நிறைவு பெற்றது. 300 Km தொலைவினைக் கடந்து நாளை காலை யேர்மனி Remich மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து Saarbrücken மாநகரத்தை வந்தடைகிறது.

உறவுகளே , எம் மாவீரர்கள் கண்ட கனவு நாம் வாழ எவ்வித அடக்குமுறையும் அற்ற விடுதலை பெற்ற சுதந்திரமான தமிழீழத் தேசமே. தொடர்ச்சியாக பல விலை கொடுப்பின் பின் 2009 ஆண்டு எம்மீது மிருகத்தனமாக கட்டவிழ்த்து விடப்பட்ட மாபெரும் இனவழிப்பின் 10ம் ஆண்டில் நாம் நிற்கின்றோம். அதனைத் தொடர்ந்து சிங்கள வக்கிர அரசினால் பல அடக்குமுறைகளில் எம் மக்கள் சிறுகச் சிறுக ஒரு இனச் சுத்திரிப்புக்கு முகம் கொடுத்துக் கொண்ருக்கின்றார்கள். எனவே, எமக்கு ஒரு நிலையான தீர்வு வேண்டும். தமிழீழத்தின் சுதந்திரக் காற்றில் நாம் வாழ புலம்பெயர் தேசத்தில் நடக்கின்ற அறவழிப் போராட்டங்களில் அனைத்து தமிழ் உறவுகளும் ஒன்று பட்டு சர்வதேசத்தினை செவிக்கதவுகளை திறக்கப் பாடுபட வேண்டும்.

வரும் 16 அன்று, பிற்பகல் 2.30 மணி அளவில் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் நடைபெற இருக்கும் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.

Updated: September 8, 2019 — 12:30 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *