Category: இலங்கை செய்திகள்

தமிழின படுகொலை புரிந்த சவேந்திர சில்வா நியமனம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர், இது ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கெடுப்பை பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பசெலெட் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “போரின் போது, அவரும், அவரது படைகளும் அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதான தீவிரமான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், […]

சஜித்திற்காக தேங்காய் உடைத்த செம்புகள் இவர்களை கண்டுகொள்வார்களா ? ( காணொளி )

இன்று வன்னியில் சஜித்பிரேமதாசாதன் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று கூட்டமைப்பின் செம்புகள் காவடி எடுப்பார்கள்,கற்பூரம் கொழுத்துவார்கள்,ஏன் தீயில் விழும் அளவிற்கு மாறிவிட்டார்கள் அதன் முன்கட்டமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தேங்காய் உடைத்தார்கள் அருகில் உள்ள கேப்பாபுலவு மக்கள் இன்றும் தங்கள் நிலங்களை கேட்டு போராடிவருகின்றார்கள். எல்லாம் பணத்திற்காக என்று மாற்றிவிட்ட நிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் வன்னியில் அதிகரித்துள்ளது கம்பரெலிய திட்டம் என்ற அபிவிருத்தி திட்டம் ஊடாக வன்னியின்பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள ஆட்சியாளர்களுக்கு துணைபோய் கோடிக்கணக்கில் […]

கிளிநொச்சியில் விபத்து சிறிலங்கா இனப்படுகொலை இராணுவத்தினர்கள் பலி !!

கிளிநொச்சி பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற மூன்றாவது புகையிரத விபத்தில் ஶ்ரீலங்கா இராணுவத்தின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த ஐந்து இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று மத்திய 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மதிய நேர கடுகதி புகையிரதத்தில் ஏ9 வீதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி பயணித்து இராணுவத்தின் மருத்துவப் பிரிவின் ஹன்ரர் ரக வாகனம் மோதியிதில் இவ் அணர்த்தம் ஏற்பட்டுள்ளது. புகையிரத அருகில் […]

ஊடகங்களை அடக்க முயலும் சிங்கள சேவகன் சுரேன் ராகவன்: முல்லை மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் அமளி !!

வடதமிழீழம்: முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது . குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் , பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களை பார்த்து ஆளுநர் சுரேன் இராகவன் தனியார் ஊடகங்கள் யார் என கேட்டு தனியார் ஊடகங்களை வெளியேறுமாறும் ,பின்னர் கூட்ட தீர்மானங்களை வழங்குவதாகவும் அரச […]

பேரினவாத ஶ்ரீலங்கா இராணுவ கடையில் மதுபானம் விற்பனை: மாவையின் உதவியாளர் சுகிர்தன் உடந்தை..!!

வடதமிழீழம்: காங்கேசன்துறையில் இயங்கி வரும் பேரிஇனவாத அழிப்பு சிங்கள இராணுவத்தின் நலன்புரி விற்பனை நிலையத்தில் மதுபான விற்பனை நடைபெற்று வருவதாக வலிவடக்கு பிரதேசசபை கூட்டங்களில் நீண்டகாலமாக உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். காங்கேசன்துறை பகுதியானது வலி வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசமாக இருப்பதுடன் அப்பகுதிக்குள் எந்தவித மதுபான விற்பனை நிலையங்களிற்கும் அனுமதி வழங்கப்படாதிருக்கும் நிலையில் பேரினவாத இராணுவத்தினர் எந்த அனுமதியும் பெறாமல் நீண்டகாலமாக மதுபானம் விற்றுவருகிறார்கள். இது தொடர்பில் வலிவடக்கு பிரதேசசபையில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன் […]

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பு? 18ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற குழு கூட்டம்!

மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு மதிப்பளித்து பதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அமைச்சுக்களை மீளபொறுப்பேற்பது குறித்து எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முஸ்லிம் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகார முன்னாள் அமைச்சர் அப்துல் கலீம் தெரிவித்தார். நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீது தாக்குதலுடன் இவர்களும் தொடர்புடையவர்கள் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்து […]