Category: சர்வதேச செய்திகள்

நமது சின்னம் “விவசாயி” – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சீமான் அறிமுகம் !!

நமது சின்னம் “விவசாயி” – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சீமான் அறிமுகம் !!

எழுவர் விடுதலையில் இன்னும் ஏன் தாமதம்.?

7 பேரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப் போவதாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார் . `ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம்’’ என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவைக் […]

திருமா, ராமதாஸ், வேல்முருகனை விமர்சிக்க வேண்டாம்: சீமான் அறிவுறுத்தல் !

சமூக வலைத்தளங்களில் செயல்படும் நாம் தமிழர் கட்சியினர் தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்துவிட்டு நமது கட்சியின் வரைவு அறிக்கையையும், தேர்தல் சின்னத்தையும், தத்துவத்தினையும் மக்களிடம் கொண்டுசெல்லுங்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது கட்சியினரை அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தாங்கள் யாருடனும் கூட்டு சேரப்போவதில்லை என கூறி தமிழகம் – புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து களம் காண தயாராகவுள்ளது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி. நாற்பது தொகுதிகளில் சரிபாதியாக […]

ஜெனிவாவில் நாடு கடந்தும் தமிழர்களை சண்டைக்கு இழுக்கும் சிங்களம் !!

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் விசேட உபகுழுக் கூட்டத்தில் பங்கேற்ற சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் இடைநடுவில் வெளியே சென்றுள்ளனர். பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்த இலங்கை குறித்த விசேட அமர்வு இன்று ஜெனிவாவில் குழு அறையில் பகல் 12 மணியிலிருந்து 1 மணிவரை பசுமைத் தாயக அமைப்பின் ஏற்பாட்டில் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குணர் ச.வி.கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த விசேட உபகுழுக் கூட்டத்திலேயே பங்கேற்ற சரத் […]

தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள் அழிக்கப்படுகிறது -பிபிசி

இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூறையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர். சங்கமன் கண்டி பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில், ஏராளமான புராதன சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில சின்னங்கள் கிறிஸ்துவுக்கு முன்னர் இரண்டாம் […]

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் தானே வாதாடி கொள்வதாக கூறியுள்ளான்.

நியூசிலாந்தின் Christchurch நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரண்டன் டாரண்ட், பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அப்போது பிரண்டன் சார்பாக வழக்கறிஞர் ரிச்சர்ட் பீட்டர் வாதாடினார். இந்நிலையில் ரிச்சர்ட் பீட்டர், AFP செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், பிரண்டன் தனக்காக வழக்கறிஞர் வாதாடுவதை விரும்பவில்லை. அவர் தானே வாதாட வேண்டும் என முடிவெடுத்துள்ளார் என […]