Category: தேசியத்தலைவர்

தமிழீழத்தின் எதிர்கால சிற்பிகள் உருவாகும் காந்தரூபன் அறிவுச்சோலை…!

கோப்பையில் ஒரு குளிர்மையான பெரிய மாந்தோப்பு. அந்த மாந்தோப்பு வளவில் விடுதிகள் போன்று ஆங்காங்கே காணப்படும் வீடுகள். ஒருபுறத்தில் பாடசாலைக் கட்டிடம். இன்னொரு புறத்தில் பெரியதொரு சமையற்கூடம். முன்புறத்தில் தண்ணீர் தாங்கி அழகான, அமைதி நிறைந்த ஒரு பூங்காவிற்குள் புகுந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. மாந்தோப்பை மெல்லென பற்றிப் படரும் காற்றாய், மாங்கிளையில் கூடுகட்டி தாவிப் பறந்து திரியும் குருவிகளாய், சுதந்திரமான மகிழ்வுடன் ஓடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர் கூட்டம் நாம் உள்ளே சென்றதும் “மதிய வணக்கம் மாமா”, […]

தெய்வப் பிறவிகள்தான் கரும்புலிகள்.!

பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள். கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள். ஒரு கரும்புலிவிரன் தன்னைவிட தன் இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே […]

இந்திய – தமிழீழப்போர்….!!!

1987 ஒக்டோபர் 10ம் நாள் இந்திய தமிழீழப் போர் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜீ இராமச்சந்திரனுக்கு 1987 ஒக்டோபர் 1ம் திகதி தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறார் எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக்கொலையுண்ட  சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின. இனமோதல்கள் வெடித்தன இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்ட பழிகளைச் சும த்தியது. இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்திய பாதுகாப்பு மந்திரி திரு.பந்த், இந்திய தூதுவர் திரு தீட்சித், இந்திய […]

AK 47 உம் சுவாரசியமான 20 சம்பவங்களும் !!!

AK 47 உம் சுவாரசியமான 20 சம்பவங்களும் (AK 47 ய் உருவாக்கியவரின் ஜாபகார்த்தமாக) 1) மிக்ஹைல் கலாஷ்நிகோவ், 2-ம் உலக யுத்தத்தின்போது ரஷ்ய ராணுவத்தில் டாங்கி கமாண்டராக இருந்தவர். 1942-ம் ஆண்டு பிரையன்ஸ்க் என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் இவரது தோளில் காயம் ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அதே வைத்தியசாலையில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மற்றைய ராணுவ வீரர்கள், தாம் யுத்தம் புரிந்தபோது உபயோகித்த ரஷ்ய துப்பாக்கிகள் சரியாக இயங்குவதில்லை என அடிக்கடி பேசிக்கொள்வதை […]

மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும்

தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன். தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.;  சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் […]

தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனை….

ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.